தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குதிச்சிடுறா கைப்புள்ள..! மாட்டிக்கொண்ட காதலனுக்கு மறக்க முடியாத சம்பவம்! - chapra

பிகாரில் காதலியை பார்க்க வந்த காதலன், தன்னை காப்பாற்றிக்கொள்ள கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குதிச்சிடுறா கைப்புள்ள.. மாட்டிக்கொண்ட காதலனுக்கு மறக்க முடியாத சம்பவம்..
குதிச்சிடுறா கைப்புள்ள.. மாட்டிக்கொண்ட காதலனுக்கு மறக்க முடியாத சம்பவம்..

By

Published : Dec 12, 2022, 10:05 AM IST

சப்ரா:பிகார் மாநிலத்தின் சப்ராவில் உள்ள கட்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டுக்கு, அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அங்கிருந்து தப்பிய மர்ம நபர், செல்லும் வழியில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார்.

இதனிடையே குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் கிணற்றை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து மர்ம நபரை கிணற்றில் இருந்து மீட்ட கிராமத்தினர், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தான் காதலித்த பெண்ணை பார்ப்பதற்காகத்தான் வீட்டின் மேலே ஏறியதாக அந்நபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் உடன் கிராமத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறுதியாக பெற்றோர் சம்மதத்துடன் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த எதிர்பாராத திருமண நிகழ்வு அப்பகுதியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:ஓடும் காரில் தாய்க்கு பாலியல் தொல்லை; 10 மாத குழந்தையை வெளியே வீசிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details