தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’வலுவான தேசத்தைக் கட்டமைக்க மாநிலங்கள் முன்வர வேண்டும்’ - பியூஷ் கோயல் - வர்த்தக மன்றம் கூட்டம்

டெல்லி : வலுவான தேசத்தைக் கட்டமைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு மாநிலங்கள் துணை நிற்க வேண்டும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

By

Published : Dec 3, 2020, 3:23 PM IST

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் வர்த்தக மன்றக் கூட்டம் நேற்று (டிச.02) நடைபெற்றது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றக் கூட்டத்தில் புதிய வெளியுறவு வர்த்தக கொள்கை, வியூகங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் நோக்கிலான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் பேசிய பியூஷ் கோயல், "வலுவான தேசத்தை உருவாக்கி நாட்டை மாற்றியமைக்கும் இலக்கை அடைய மாநிலங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதே எங்கள் திட்டம். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நல்ல எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதில் நம்பிக்கையாக உள்ளோம். வர்த்தகத்தை எளிதாக செய்யும் வகையில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவிற்கு வந்து நிலத்தை வாங்கி ஒப்புதல் பெற்று வர்த்தகத்தை மேற்கொள்ள, மற்ற நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். வலுவான தேசத்தைக் கட்டமைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு மாநிலங்கள் துணை நிற்க வேண்டும். அந்த வகையில் சிறப்பாக மாநில அமைச்சர்கள், அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டிற்கு சாதகமான துறைகளைக் கண்டறிந்து அதை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், 20 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியை மேற்கொள்ளும் 24 தொழில்துறைகளை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான ஊக்குவிக்கும் துறை கண்டறிந்துள்ளது. எளிதான முறையில் வர்த்தகம் மேற்கொள்ளத் திட்டங்கள் வகுக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details