தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கால் ரெக்கார்ட் செய்வது சட்டவிரோதம்...! சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஒருவரின் அணுமதி இல்லமல் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்வது தனி மனித உரிமையை மீறும் செயலாகும் என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

phone-call-recording-is-a-violation-of-right-to-privacy-clarified-by-the-court
கால் ரெக்கார்ட் செய்வது சட்டவிரோதம்...சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 2:15 PM IST

சத்தீஸ்கர்:ஒருவரின் அனுமதி இல்லமல் தொலைப்பேசி அழைப்பை பதிவு செய்வது அல்லது ஒட்டு கேட்பது என்பது இந்தியா அரசியலமைப்பு சட்டம் 21ன் படி குற்றமாகும் என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மாகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது பெண் தன்னுடைய 44 வயது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் தன் மனைவிக்கு பிறருடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த உரையாடலை தான் மொபைல் போனில் பதிவு செய்துள்ளதாகவும், அதை விசாரித்து அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குமாறும் கணவர் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்ற குடும்பநல நீதிமன்றம் மனைவிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.

குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனைவி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டே முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து பாதிக்கப்பபட்ட பெண்ணின் வழக்கறிஞர் வாதாடும் போது பெண்ணின் தனியுரிமையை மீறும் விதமாக தொலைப்பேசி பதிவுகளின் அடிப்படையில் கணவரின் மனுவை குடும்ப நீதிமன்றம் விசாரிக்க அனுமதித்தது சட்டப்படி தவறு என்று கூறினார்.

கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் வழங்கிய சில தீர்ப்புகளை மேற்கோள் பெண்ணின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டே பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுது, பெண்ணின் தனியுரிமையை மீறும் விதமாக தொலைப்பேசி பதிவின் அடிப்படையில் கணவரின் மனுவை குடும்பநல நீதிமன்றம் அனுமதித்தது சட்டப்படி தவறு. அதனால் இந்த உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்யும் குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது எனக் கூறி கணவரின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:சர்வதேச உணவு தினம் : பட்டினியில்லா சமுதாயத்தை உருவாக்க போருக்கு தயாராகும் பசி!

ABOUT THE AUTHOR

...view details