டெல்லி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் விபரங்களை விரிவாகக் காண்போம்...
- பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலையில் 7 ரூபாயும் குறையும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படக்கூடும்.
- உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்படும் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா 200 ரூபாய் வீதம் ஒராண்டுக்கு மானியம் வழங்கப்படும். இதனால், ஆண்டுக்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிமெண்ட் விலையை குறைக்கவும், இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கவும், உருக்கு ஆலை மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்.
- பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உர மானியம் 1.05 லட்சம் கோடி ரூபாயை தவிர, விவசாயிகளுக்கு கூடுதலாக 1.10 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
- சில உருக்கு மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் - இரும்பு மற்றும் எஃகுக்கான மூலப்பொருட்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படும் - சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிமென்ட் கிடைப்பதை மேம்படுத்தவும், சிமென்ட் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.