மேற்கு வங்க வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், அங்கு பாஜகவுக்கு ஆதரவு கோரி பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
அந்த வகையில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மேற்கு வங்கத்தில் பரப்புரையாற்றினார். அப்போது, அவர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன வளர்ச்சித் திட்டங்களைச் செய்வோம் என்பதைக் குறிப்பிட்டார்.
அப்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை குறித்தும் பேசினார்.
அப்போது, "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துவருகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை குறையும்" என அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். இதனால் மக்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.
இரட்டை இன்ஜின் அரசு
மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் தேர்தல் குறித்து அவர் பேசுகையில், மக்கள் இரட்டை இன்ஜின்போல் செயல்படும் அரசின் மீது நம்பிக்கைவைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாக (பாஜக) இருந்தால் நன்மைகள் பல கிட்டும் என்ற பொருளில் அமைச்சர் இரட்டை இன்ஜின் அரசு என்று குறிப்பிடுகிறார்.