புதுச்சேரியில் கரோனோ தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுக்கடைகள் கடந்த மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் கரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருவதன் காரணமாக, மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று (ஜூன் 8) முதல் அனைத்து கடைகளும் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறக்கப்படும் குறிப்பாக மதுபானக் கடைகளும் திறக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள புதுச்சேரி- தமிழ்நாடு எல்லையான கந்தன்குடி சோதனை சாவடியில் தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரி மாநிலமான காரைக்காலுக்கு மது வாங்க மதுப்பிரியர்கள் இருசக்கர வாகனங்கள், சைக்கிள், நடைபயணமாக படையெடுத்து வந்தனர்.
மது வாங்க பாண்டிச்சேரிக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்!
நன்னிலம் அருகே உள்ள கந்தன்குடி சோதனைச்சாவடியில் மது வாங்க பாண்டிச்சேரி மாநிலத்திற்கு படையெடுக்கும் மதுப்பிரியர்களை தமிழ்நாடு காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.
மது வாங்க பாண்டிச்சேரிக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்
அப்போது அவர்களை தனிதனியாக விசாரித்து இ-பாஸ் உள்ளவர்களை மட்டுமே அனுமதித்து, இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் கந்தன்குடி சோதனை சாவடிவழியாக செல்லாமல் குறுக்கு சாலை வழியாக பயன்படுத்தி அம்பகரத்தூர் சென்று மதுப்பிரியர்கள் மது வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்பனை: பெண் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம்!