தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"கரோனா பாதித்தவர்களுக்கு எளிதில் மாரடைப்பு" - ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்! - health and Family Welfare

கரோனாத் தடுப்பூசி செலுத்தியவர்கள் அதிகளவில் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதால் இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் மத்திய குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்திய நிலையில் தற்போது அதன் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

icmr
ஐசிஎம்ஆர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 11:14 AM IST

Updated : Nov 3, 2023, 11:27 AM IST

புதுடெல்லி:ஈடிவி பாரத் செய்திகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆராய்ச்சித் தலைவர் பேட்டி அளித்தார். அதில், கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அதிகளவில் இறக்கின்றனர். இதற்கான ஆய்வுகளை ஆராய்ச்சியாளார்கள் மேற்கொண்டு, முடிவுகளை சக மதிப்பாய்விற்கு சமர்பித்து உள்ளனர் என்றார்.

கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் அதிகமானோர் மூளைப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறக்கின்றனர் என மருவத்துவமனையில் அதிக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. முன்னதாக, நாடாளுமன்ற குடும்ப நல அமைச்சக நிலைக் குழு (A Parliamentary Standing Committee on Health and Family Welfare) கரோனா தொற்றுக்கு பிறகு மாரடைப்பு இறப்புகள் அதிகரிப்பதால் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு முழு விளக்கம் மற்றும் ஆதாரத்துடன் ஆய்வினை சமர்பிக்க வேண்டும் என ஐசிஎம்ஆரிடம் (ICMR) வலியுறுத்தியது.

மேலும், குடும்ப நல அமைச்சகம் (MoHFW) ஆய்வின் சுருக்கத்தை விரைவில் இதழில் வெளியீடும் என ஐசிஎம்ஆர் தரப்பில் கூறப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது, "ஐசிஎம்ஆர் அதிகாரிகள் இது சம்பந்தமாக விரிவான ஆய்வினை மேற்கொண்டு உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் கடுமையான வேலைகளை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றார்.

மேலும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் அமரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில், SARS-CoV-2 வைரஸானது உடம்பில் அதிகரித்து மேக்ரோபேஜ்கள் உட்பட உடம்பில் உள்ள தமனி திசு சுவரில் பாதிப்பை ஏற்படுத்தி மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் டாக்டர். சியாரா கியானரெல்லி தலைமையிலான என்ஐஎச் நிதியுதவி ஆராய்ச்சிக் குழு, கடந்த மே 2020 முதல் மே 2021 வரை கரோனா காரணமாக இறந்த எட்டு பேரின் கரோனரி தமனி திசு மாதிரிகளை ஆய்வு செய்தது. NIH ஆய்வின் படி, கோவிட்-19 தொற்று மேக்ரோபேஜ்கள் மற்றும் நுரை செல்களில் பல அழற்சிப் பாதைகளைத் தூண்டுகிறது.

இந்த அழற்சி செல்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு பங்களிக்கும் மூலக்கூறுகளையும் வெளியீடுகின்றன என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து முன்னாள் இந்திய மருத்துவ அசோசியேசன் தலைவர் (IMA) டாக்டர்.ஜே.ஏ.ஜெயலால் கூறுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் உறைதல், மூளைப் பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கரோனா வைரஸ் காரணமாக ரத்தம் உறைதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!

Last Updated : Nov 3, 2023, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details