தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவர் சங்க தேர்தலுக்காக காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவன்; வைரல் வீடியோ

பீகாரில் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடும் மாணவர் ஒருவர் மாணவிகளிடம் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர் சங்க தேர்தலுக்காக காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவனின் வைரல் வீடியோ
மாணவர் சங்க தேர்தலுக்காக காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவனின் வைரல் வீடியோ

By

Published : Nov 15, 2022, 11:05 AM IST

Updated : Nov 15, 2022, 2:05 PM IST

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் பல்கலைக்கழக மாணவர் சங்க (ஜன் அதிகார்) தலைவருக்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் தீபங்கர் பிரகாஷ் மாணவிகளின் கால்களில் விழுந்து ஓட்டு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்காக போட்டியிடும் மாணவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான தீபங்கர் பிரகாஷ் என்பவர், பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது கல்லூரிக்கு வரும் மாணவிகள் மற்றும் கல்லூரியில் உள்ள மாணவிகளின் கால்களில் விழுந்து தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டு, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் இவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர் சங்க தேர்தலுக்காக காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவனின் வைரல் வீடியோ

இதுகுறித்து தீபங்கர் பிரகாஷ் கூறுகையில், ”மாணவர் சங்கத் தேர்தலில் சிலர் ரேஞ்ச் ரோவர், பார்ச்சூனர் போன்ற கார்களில் சுற்றித் திரிந்து, பிரியாணி மற்றும் குளிர்பானம் விநியோகம் செய்து வாக்கு சேகரிக்கின்றனர்.

நாங்கள் ஏழை வேட்பாளர்கள், எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு மாற்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல், தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கால்களில் விழுந்து வேண்டி கேட்டுகொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜகவில் மனைவி.. காங்கிரசில் தங்கை.. ஜடேஜாவின் வேண்டுகோள்!

Last Updated : Nov 15, 2022, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details