தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் விமானப் போக்குவரத்து : அமைச்சர் தகவல் - இந்தியா விமானப் போக்குவரத்து

கோவிட்-19 முடக்கத்திற்குப் பின் இந்தியாவில் விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Passenger
Passenger

By

Published : Dec 27, 2020, 4:43 PM IST

நாட்டின் விமானப் போக்குவரத்து குறித்த தற்போதைய நிலையை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, கோவிட் முடக்கத்திற்குப்பின் இந்தியாவின் விமானப் போக்குவரத்துறை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்றார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர், ”டிசம்பர் 26ஆம் தேதி அன்று உள்நாட்டு விமான சேவையில் மட்டும் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 821 பேர் பயணம் செய்துள்ளனர். மொத்தமாக நான்கு லட்சத்து 55 ஆயிரத்து 809 பயணிகள் ஒரே நாளில் பயணம் செய்துள்ளனர். இது கோவிட்-19க்கு முந்தைய அளவாகும்.

நமது விமான நிலையங்கள் மீண்டும் இயல்பு நிலையில் செயல்படத் தொடங்கி, நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை பாதுகாப்பான, சிறப்பான நிலையில் உள்ளது” என்றார்.

கோவிட்-19 காரணமாக நாட்டில் விமானப் போக்குவரத்து சேவை கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் முடங்கிய நிலையில், உள்நாட்டு விமான சேவை மட்டும் முதற்கட்டமாக மே 25ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க:பிரதமருக்கு கடிதம் எழுதிய 4ஆம் வகுப்பு மாணவி : உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details