தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வந்தே பாரத் ரயில் உணவில் இறந்த கரப்பான் பூச்சி.. அதிர்ந்து போன பயணி! - Vande Bharat Express train ticket price

வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை உணவாக பயணிக்கு பரோட்டா வழங்கப்பட்ட நிலையில் அதில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Vande Bharat
Vande Bharat

By

Published : Jul 27, 2023, 10:46 PM IST

போபால் : வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. போபால் மாநிலம் ரனி கமலாபட்டியில் இருந்து டெல்லி ஹசரத் நிஜாமுதின் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை 24ஆம் தேதி, இந்த ரயிலில் சென்ற பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. போபாலில் இருந்து குவாலியருக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த பயணி 20171 கோச்சில் 57வது இருக்கையில் அமர்ந்து உள்ளார்.

அப்போது அந்த பயணிக்கு காலை உணவாக பரோட்டா வழங்கப்பட்டு உள்ளது. அந்த பரோட்டாவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படத்தை அந்த பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் இந்திய ரயில்வேக்கும் உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது தொடர்பாக புகார் அளித்து உள்ளார்.

இதையடுத்து பயணியிடம் மன்னிபு கோரிய இந்திய ரயில்வே அதிகாரிகள், உடனடியாக அந்த பயணிக்கு மாற்று உணவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே தரப்பில், ஐஆர்சிடிசி மற்றும் சம்பந்தப்பட்ட உணவு சப்ளை உரிமம் பெற்ற நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பயணிக்கு உடனடியாக வேறு உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மைக் காலமாக வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஐஆர்சிடிவி மூலம் சைவ உணவு ஆர்டர் செய்த தம்பதி கோழிக் கறி வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தம்பதியின் மகள் புகார் அளித்த நிலையில் உணவு டெலிவிரி செய்தவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உணவகத்திற்கு அபராதம் விதித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் சைவ உணவு ஆர்டர் செய்த மற்றொரு பெண் பயணிக்கு அசைவ உணவு வழங்கியதும் பூதாகரத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :Opposition next meeting : ஆகஸ்ட் 25, 26ல் எதிர்க்கட்சிகள் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம்.. தகவல்!

ABOUT THE AUTHOR

...view details