ஹைதராபாத்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது "X" தளத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஜெயராம் ரமேஷ் கூறும் போது, "மகளிர்க்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும் என ஐந்து நாட்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் விவாதிக்க உள்ளதாக" தெரிவித்துள்ளார்.
ஜெயராம் ரமேஷ் கூறும் போது, இந்தியாவில் முதன் முதலில் மே 1989ஆம் ஆண்டு பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு என பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் இடஒதுக்கீடு மசோதவை அறிமுகப்படுத்தினார் அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது ஆனால் மாநிலங்கள் அவையில் தோல்வியடைந்தது. அதன் பின் 1993ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு என பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மீண்டு கொண்டுவந்தார் அது மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.
இதையும் படிங்க:மோடி அரசு முழு தோல்வி அடைந்துள்ளது..! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கடும் விமர்சனம்!
மேலும், பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் 15 லட்சத்திற்கு மேலான பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது 40 சதவீதம் ஆகும். முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு வழங்க திருத்தப்பட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அது 2010 மார்ச் 9ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் மக்களவையில் மசோத நிறைவேற்றப்படவில்லை.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் காலாவதியாகாது எனவே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்கள் அவையில் இன்னும் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் இட ஒதுக்கீட்டை மக்களவையில் இந்த மசோதவை நிறைவேற்ற 9 வருடங்களாக காங்கிரஸ் வலியுறுத்தி வருவாதாகவும் தெரிவித்தார்.
மாற்றி அமைக்கப்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டி முதல் கூட்டத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு மசோத குறித்து நேற்று (செப்.16) நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தற்போது ஜந்து நாட்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து அழுத்தம் கொடுக்கப்பட உள்ளன என தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, மக்களவையில் கலைக்கப்படாமல் இன்னும் உள்ளன என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘ஒரே நாடு ஒரே தேர்தலை காங்கிரஸ் காரியக் கமிட்டி நிராகரித்துவிட்டது’ - ப.சிதம்பரம்!