தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 22, 2020, 6:44 AM IST

ETV Bharat / bharat

எம்.பி.க்கள் வருவது சந்தேகம்... நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா?

நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

parliament-may-miss-winter-session-as-mps-reluctant-to-visit-covid-hit-capital
parliament-may-miss-winter-session-as-mps-reluctant-to-visit-covid-hit-capital

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் சார்பாக மூன்று கூட்டத்தொடர்கள் நடக்கும். இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின், மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. இந்தநிலையில் இம்மாத இறுதியில் குளிர்கால கூட்டத்தொடர் நடக்க வேண்டும்.

ஆனால் கரோனா வைரஸ் டெல்லியில் மீண்டும் அதிகமாகி வருவதால், நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நவ.11ஆம் தேதியில் மட்டும் டெல்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 593ஆக உள்ளது. அதேபோல் அன்று மட்டும் 104 உயிரிழந்தனர்.

மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் கிட்டத்தட்ட 30 எம்.பி.க்களும்., 2 மத்திய அமைச்சரகளும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், '' நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவதற்கு மக்களவை செயலகம் தயாராக உள்ளது. எப்போது நடத்த வேண்டும் என்பதை நாடாளுமன்ற விவகார அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும். குளிர்கால கூட்டத்தொடருக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டு பின், முறையாக தெரிவிக்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க:உயிருக்கு போராடும் அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details