தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் பாபநாசம் பட பாணியில் கொலை - போலீசார் தீவிர விசாரணை - பாபநாசம் பட பாணியில் கொலை

கேரள மாநிலம் கோட்டயத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீட்டில் கான்கிரீட் போட்டு மூடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharat கேரளாவில் பாபநாசம் பட பாணியில் கொலை
Etv Bharat கேரளாவில் பாபநாசம் பட பாணியில் கொலை

By

Published : Oct 1, 2022, 7:12 PM IST

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சங்கனாசேரியில், ‘பாபநாசம்’ பட பாணியில் ஒருவரை கொலை செய்து வீட்டில் புதைத்து, தரை தள கான்கிரீட் போடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் ஆலப்புழாவைச் சேர்ந்த பிந்துகுமார் (40) என்பவராக இருக்கக் கூடும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர், காணாமல் போனதாக ஏற்கனவே ஆலப்புழா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காணாமல் போன முத்துக்குமார்

அவரது கடைசி செல்போன் டவர் லொகேஷன் சங்கனாச்சேரியில் இருந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர். மேலும், அவரது கடைசி அழைப்பு அவரது நண்பர் முத்துக்குமாருக்கு வந்ததையும் கண்டறிந்தனர். இந்த நிலையில், காவல் துறையினர் முத்துக்குமாரின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அங்கு முத்துகுமார் இல்லை. தொடர்ந்து அவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முத்துக்குமாரின் வீட்டில் சில தினங்களாக மாடியை சீரமைக்கும் பணிகள் நடப்பதாகவும், வீட்டின் தரையை தோண்டி எடுத்து பின்னர் அதன் மேல் கான்கிரீட் போட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

கேரளாவில் பாபநாசம் பட பாணியில் கொலை

இதனால் சந்தேகமடைந்த போலீசார், முத்துகுமாரின் வீட்டின் தரையை தோண்டி சோதனை செய்ய முடிவெடுத்தனர். அதன்பின் ஆர்டிஓ உத்தரவின் பேரில், சங்கனாச்சேரி தாசில்தார் முன்னிலையில் முத்துக்குமாரின் வீட்டின் தரையை காவல் துறையினர் தோண்டி ஆய்வு செய்தனர். சுமார் 30 நிமிடங்களாக தரையைத் தோண்டியபோது, ​​தரையின் உள்ளே ஒரு பெரிய பை இருந்தது தெரியவந்தது. அதனை எடுத்தபோது அதனுள் உடல் இருப்பது தெரியவந்தது.

அந்த உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:வீட்டோட மாப்பிள்ளையா வரேன்... 28 வயதில் 24 பெண்களுடன் திருமணம்... சிக்கிய பெங்கால் பிளே பாய்...

ABOUT THE AUTHOR

...view details