உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் கங்கை கரையோரத்தில் உள்ள இரண்டு பகுதிகளில் சடலங்கள் மணலில் புதைக்கப்பட்டு கிடக்கும் சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்தச் சடலங்கள் துணிகளால் மூடப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை கரோனாவால் பாதிக்கப்பட்ட சடலங்களா என்பது உறுதியாக தெரியவில்லை. இச்சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து உன்னாவ் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ரவீந்திர குமார் கூறுகையில், " சிலர் உடல்களை எரிப்பதில்லை. அதற்கு மாறாக, ஆற்றின் கரையோரம் சடலங்களைப் புதைத்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு அலுவலர்களை அனுப்பியுள்ளேன். இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.