கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி விநியோகப் பணி உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் தயாரித்த கரோனா தடுப்பூசி 72 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
'இந்தியாவின் நற்பெயருக்கு மேலும் ஊக்கம் கிடைத்துள்ளது' - வெளியுறவுத்துறை அமைச்சர் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
டெல்லி: 'உலகின் மருந்தகம்' என்ற நற்பெயருக்கு மேலும் ஊக்கம் கிடைத்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கர்
இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "உலக பேரிடரின் மத்தியில் 72 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பட்டுள்ளது. இதன் மூலம், 'உலகின் மருந்தகம்' என்ற நற்பெயருக்கு மேலும் ஊக்கம் கிடைத்துள்ளது.
உலகமே கரோனாவால் பின்னடைவைச் சந்தித்த பிறகு, உள்நாட்டு தடுப்பூசிகளை விநியோகித்ததன் மூலம் இந்தியாவிற்கு உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்" என்றார்.