தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம்

ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி, இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. பனேஷியா நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடி தடுப்பூசி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

Sputnik V
Sputnik V

By

Published : May 24, 2021, 9:37 PM IST

Updated : May 25, 2021, 9:12 AM IST

இந்தியாவின் ’பனேஷியா பயோடெக்’ நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனம் (RDIF) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”RDIF மற்றும் பனேஷியா பயோடெக் அமைப்புடன் இணைந்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கியுள்ளது.

உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இந்த உற்பத்தி, உலக நாடுகளில் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முக்கியப் பங்காற்றும்” எனத் தெரிவித்துள்ளது.

மற்றொரு முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தியை வரும் ஜூலை மாதத்தில் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க:கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து ‘மஞ்சள் பூஞ்சை’ : அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!

Last Updated : May 25, 2021, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details