தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் மறைவு! - Pervez Musharraf die

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி மற்றும் அதிபருமான பர்வேஷ் முஷ்ரப் காலமானார். துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.

பர்வேஷ் முஷ்ரப்
பர்வேஷ் முஷ்ரப்

By

Published : Feb 5, 2023, 12:49 PM IST

துபாய்:பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதியும் அதிபருமான பர்வேஷ் முஷ்ரப் காலமானார். அவருக்கு வயது 79. உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் கடந்த ஒராண்டிற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்தும், நீண்ட கால நோய்கள் காரணமாகவும் உயிர் பிரிந்ததாக அமெரிக்கன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முஷரப் துபாயில் வசித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்த பர்வேஷ் முஷ்ரப், பின்னர் ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தான் அதிபரானார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். 1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பர்வேஸ் முஷாரப் பிறந்தார். தேச பிரிவினையின்போது முஷாரப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.

அமிலாய்டோசிஸ்(Amyloidosis) என்ற அரிய வகை நோய்த் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த முஷ்ரப், அந்த நோயின் தீவிரம் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வரும் பர்வேஷ் முஷ்ரப், கடந்த 8 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது எஞ்சிய வாழ்நாளை பாகிஸ்தானில் கழிக்க முஷ்ரப் ஆசைப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரபின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சென்னை நிறுவன கண் மருந்தால் அமெரிக்காவில் உயிரிழப்பு - மருந்து நிறுவனத்திற்கு தடை!

ABOUT THE AUTHOR

...view details