தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தானில் வங்கி மேலாளரை கொலைசெய்த பாதுகாவலர்! - பாகிஸ்தான் வங்கி மேலாளரை சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வங்கி மேலாளர் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதாக கூறி பாதுகாவலரே கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pak bank manager shot dead
pak bank manager shot dead

By

Published : Nov 5, 2020, 10:16 PM IST

பாகிஸ்தான் கைதா பாத்தில் அமைந்துள்ள பன்னாட்டு வர்த்தக வங்கியில் மாலிக் இம்ரான் ஹனிப் மேலாளராகப் பணிபுரிந்துவந்துள்ளார். அதே வங்கியில், பாதுகாவலராகப் பணிபுரிந்துவருபவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அஹமத் நவாஸ். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட பகை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலை மாலிக் அகமதை சரமாரியாகச் சுட்டுள்ளார். பலத்த படுகாயமடைந்த மேலாளர் லாகூர் சேவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நவாஸ் கைதுசெய்யப்பட்டார்.

மேலாளர், ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைகாக லாகூரின் சர்வீசஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு இன்று (நவ. 05) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, கடவுள் குறித்து மாலிக் அவதூறாகப் பேசிய காரணத்தால் அவரை கொலை செய்ததாக நவாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு நவாஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு காரணம் மாலிக் என்றும் எனவே இந்தப் பகை காரணமாக வைத்து அவர் கொலை செய்துள்ளார் என மேலாளரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details