இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) முன்னாள் தேசியத் தலைவர் மருத்துவர் கே.கே.அகர்வால். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். கரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று (மே. 17) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவர் கரோனா பாதித்து மரணம்!
டெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் மருத்துவர் கே.கே.அகர்வால் கரோனா தொற்று காரணமாக, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவர் கரோனா பாதித்து மரணம்!!
இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'பத்மஸ்ரீ டாக்டர் கே.கே.அகர்வால் கரோனா பாதித்து உயிரிழந்தார். மருத்துவர் வாழ்க்கையை பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணித்து சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி: இருதினங்களில் தொடங்கும்!