தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புகழ்பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ் காலமானார்; பிரதமர் இரங்கல்

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஒரிய எழுத்தாளரான மனோஜ் தாஸ் உடல்நலக் குறைவால் நேற்று (ஏப்.28) இரவு காலமானார்.

By

Published : Apr 28, 2021, 6:40 PM IST

padma bhushan manoj dos death, புகழ்பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ் காலமானார், எழுத்தாளர் மனோஜ் தாஸ்
padma bhushan manoj dos is no more

புதுச்சேரி: ஸ்ரீ அரபிந்தோ ஆசிரம அறக்கட்டளை உறுப்பினர் எழுத்தாளர் மனோஜ் தாஸ் (87). இவர், 1934 ஆண்டு பிப்ரவரி 27 நாளில் ஒரிசா மாநிலத்தில் சங்கரியில் பிறந்தார். அரபிந்தோ சர்வதேச கல்வி மையத்தில் ஆங்கில இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் உள்ள துப்பே வீதியில் வசித்து வந்த இவர் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஒரியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்தாளரான இவர், கல்வி, எழுத்து துறையில் ஆற்றிய பணிக்காக 2001ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், கடந்த ஆண்டு பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ் காலமானார்

மனோஜ் தாஸ் ஒரிய, ஆங்கில மொழிகளில் நாவல், சிறுகதை, கவிதை, பயணக் குறிப்புகள், கட்டுரைகள் என பல இலக்கியப் படைப்புகளை படைத்துள்ளளார். இவருடைய பல சிறுகதைகள் இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் தனது பகடியான எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவர். இவருடைய எழுத்துகளில் எளிய மனிதர்களின் சமூக உளவியல், மனித இயல்புகள் போன்றவை ஆழாக வேரூன்றி இருக்கும்.

மனோ தாஸ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் மனோஜ் தாஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஒரு எழுத்தாளர் மறைந்தாலும், அவரது எழுத்துக்கள் என்றும் மறையாது என்பதுபோல் மனோஜ் தாஸ் எழுத்துக்கள் மொழி கடந்து, நாடு கடந்து மனித மனங்களை இணைக்கும் கருவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details