சென்னை: வேளாண் திருத்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது குறித்து ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதில் பல பேர் போராட்ட களத்திலேயே உயிரிழந்தனர்.
சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக இன்று (நவம்பர் 19) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், "அறவழிப் போராட்டங்கள் மூலம் கிடைக்காத வெற்றி, சில நேரங்களில் வரப்போகும் தேர்தல் அச்சத்தினால் கிடைத்துவிடும்.
மூன்று புதிய வேளாண் சட்டத்திருந்தங்களை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப்பெற்றது, அவரது கொள்கை பிடிப்பாலோ, இதய மாற்றத்தாலோ நிகழ்ந்தது அல்ல; இது தேர்தல் அச்சத்தால் தூண்டப்பட்டது.
எதுவாயினும் இது நாட்டு விவசாய பெருங்குடிகளுக்கும், தொடர் அழுத்தங்கள் கொடுத்துவந்த எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் கிடைத்த பெரும் வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு