கரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனைத் தயாரிக்கும் ஆலையை முதலமைச்சர் ரங்கசாமி அரசு மருத்துவமனையில் இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் திட்டத்தில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஆறு ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில், மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார். அவருடன் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறுமுகம், ரமேஷ் , சுகாதாரத்துறை செயலாளர் அருண், துணை வட்டாட்சியர் சுதாகர், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.