டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் ஆங்காங்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி கிடைக்காமல் பல இடங்களில் அவதிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி பவானா மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வாங்குவதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, நமது ஈடிவி பாரத் செய்தியாளர் மருத்துவமனையில் மக்களிடம் பேசினார். அப்போது ஒருவர் கூறுகையில் ’’கரோனா தொற்றால் பல பேர் உயிரிழந்துள்ளனர். மறுபக்கம் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை.
அதுமட்டுமல்லாமல், 35 வயதுடைய ஒருவர் கரோனா பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் கிடைக்கவில்லை. மேலும், ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க நீண்ட நேரமாக வரிசையில் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆக்சிஜன் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்’’ என்றார்.
ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அவதி! அதுமட்டுமல்லாமல், விற்பனையாளர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சிலிண்டர்களை வழங்குவதாகவும், இணைப்புகள் உள்ளவர்கள் 10 முதல் 12 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் ஆக்சிஜனுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: திணறடித்த ராமு; புலம்பிய துரை...!