தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தென் மாநிலங்களுக்கு 1,48,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்!' - Federal government oxygen supply

டெல்லி: 14800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாட்டின் தென் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு 4500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தென் மாநிலங்களுக்கு 1,48,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்
தென் மாநிலங்களுக்கு 1,48,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்

By

Published : Jun 12, 2021, 10:02 AM IST

இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் விரைவு ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்துவருகிறது.

29,000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் விரைவு ரயில்கள் கொண்டுசேர்த்துள்ளன.இதுவரை 1,684 டேங்கர்களில் சுமார் 29,185 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம்செய்யப்பட்டுள்ளது.

409 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 28 டேங்கர்களில் சுமார் 551 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 7 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தனது ஆறாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரசை 80 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவுடன் ஜார்கண்டிலிருந்து அஸ்ஸாம் பெற்றது.

தென் மாநிலங்களுக்கு 1,48,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்

14800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாட்டின் தென் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் விநியோகித்துள்ளன.

தமிழ்நாட்டிற்கு 4500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகாவிற்கு முறையே 3300 மற்றும் 3500 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அஸ்ஸாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களுக்கு 1,48,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்

இதுவரை திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் மாநில வாரியாக...

  1. தமிழ்நாட்டிற்கு 4584 மெட்ரிக் டன்,
  2. மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன்,
  3. உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன்,
  4. மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன்,
  5. டெல்லிக்கு 5722 மெட்ரிக் டன்,
  6. ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன்,
  7. ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன்,
  8. கர்நாடகாவிற்கு 3564 மெட்ரிக் டன்,
  9. உத்தரகாண்டிற்கு 320 மெட்ரிக் டன்,
  10. ஆந்திரப் பிரதேசத்திற்கு 3364 மெட்ரிக் டன்,
  11. பஞ்சாபிற்கு 225 மெட்ரிக் டன்,
  12. கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன்,
  13. தெலங்கானாவிற்கு 2851 மெட்ரிக் டன்,
  14. ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன்,
  15. அஸ்ஸாமிற்கு 480 மெட்ரிக் டன்

ABOUT THE AUTHOR

...view details