தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

4200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்த 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' - Oxygen Express

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு 268க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 4 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்திய ரயில்வே விநியோகம் செய்துள்ளது.

Oxygen Express trains deliver 4200 metric tons of oxygen  ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்  4200 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்  Oxygen Express  Oxygen Express trains
Oxygen Express trains

By

Published : May 10, 2021, 6:44 AM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகாமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்கள் மருத்துவம், ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்ட வசதிகளின்றி கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு 268க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 4 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்திய ரயில்வே விநியோகித்துள்ளது.

இதுவரை 68 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில்கள், ஏற்கனவே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளன. வேண்டுகோள் விடுக்கும் மாநிலங்களுக்கு, விரைவில் ஆக்சிஜனை விநியோகிக்க இந்திய ரயில்வே முயற்சி எடுத்துவருகிறது. தற்போது வரை மகாராஷ்டிராவுக்கு 293 மெட்ரிக் டன், உத்தரப்பிரதேசத்துக்கு 1,230 மெட்ரிக் டன், மத்தியப்பிரதேசத்துக்கு 271 மெட்ரிக் டன், ஹரியானாவுக்கு 555 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 123 மெட்ரிக் டன், ராஜஸ்தானுக்கு 40 மெட்ரிக் டன், டெல்லிக்கு 1679 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கம் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக கான்பூருக்கு நேற்று (மே.9) 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது. புதிய ஆக்சிஜன் ரயில்களை இயக்குவது மிகவும் ஆற்றல் வாய்ந்த பணி. இது பற்றிய விவரங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும். நேற்று (மே. 9) இரவு, இன்னும் அதிக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டன.

இதையும் படிங்க:பற்றாக்குறையைப் போக்கும் 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'

ABOUT THE AUTHOR

...view details