தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிவேக வாகனம் மோதி 3 பேர் உயிரிழப்பு- பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு - லாரி மோதியதில் மூன்று பேர் பலி

டெல்லி- ஜெய்ப்பூர் சாலையில், அதிவேகமாக வந்த லாரி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Over speeding truck rams into public, kills three in Jaipur
Over speeding truck rams into public, kills three in Jaipur

By

Published : Jan 6, 2021, 11:26 AM IST

ஜெய்ப்பூர்: டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

வளைவில் வாகனத்தை திருப்ப முயன்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கோயிலின் மீது மோதி வாகன விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அதிவேகமாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை கைது செய்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன விபத்தின் சிசிடிவி காட்சி

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும், ஓட்டுநரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் போர் விமானம் விபத்து!

ABOUT THE AUTHOR

...view details