டெல்லி: சப்தமில்லாமல் சாதனையொன்றை அறங்கேற்றியுள்ளது தேசிய தலைநகரை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம்.
டெல்லியில் புதன்கிழமை (ஆக.4) 95 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் 45 ஆயிரத்து 314 பேருக்கு கரோனா தடுப்பூசி இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 2 லட்சத்து 95 ஆயிரத்து 389 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 75 லட்சத்து 33 ஆயிரத்து 335 பேர் முதல் தவணையையும், 27 லட்சத்து 62 ஆயிரத்து 54 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் அடுத்த நான்கு நாள்களுக்கு தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ளன. இந்தத் தகவல்கள் மாநில அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : டெல்லி தலித் சிறுமி வன்புணர்வு கொலை- நியாயமான விசாரணை தேவை- பாஜக!