தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 1, 2021, 5:07 PM IST

ETV Bharat / bharat

மாநிலங்களின் கைவசம் 79 லட்சம் தடுப்பூசிகள் - மத்திய அரசு தகவல்

தற்போதைய நிலவரத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 79 லட்சத்து 13 ஆயிரத்து 518 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Covid vaccine
Covid vaccine

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மாநிலங்கள் இந்த மூன்றாம் கட்டத் தடுப்பூசி திட்டப் பணிகளை தொடங்கவில்லை.

இந்நிலையில், மாநிலங்களின் தடுப்பூசி கையிருப்பு தொடர்பாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 79 லட்சத்து 13 ஆயிரத்து 518 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

அத்துடன் அடுத்த மூன்று நாள்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன. மாநில அரசுகளுக்கு இதுவரை மத்திய அரசு சார்பில் சுமார் 16.37 தடுப்பூசிகள் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்திற்கு பயனாளர்கள் கோ-வின் அல்லது ஆரோக்கிய சேது இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:130 கோடி மக்களுடன் மூழ்கிவரும் படகு - ப. சிதம்பரம் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details