சென்னை:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாணவர்களிடையே புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், திறக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே, 520 பள்ளி மாணவர்களுக்கும், 49 பணியாளர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2)
இவர்களில், பல மாணவர்களுக்கு உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக, கூறப்படுகிறது. இதனிடையே இன்று (நவ.25) ஒடிசா மாநிலத்தில் 70 பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 55 பேர் மாணவிகள். இதன்காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.