இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும், வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை மொத்தம் ஏழு கோடியே ஆறு லட்சத்து 18 ஆயிரத்து 26 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அவற்றில், முதல் டோஸ் ஆறு கோடியே 13 லட்சத்து 56 ஆயிரத்து 345 பேருக்கும், இரண்டாம் டோஸ் 92 லட்சத்து 61 ஆயிரத்து 681 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45, 60 வயதுக்குள்பட்டோர் அடங்குவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 16ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. பிப்ரவரி 2ஆம் தேதிமுதல் முன்களப் பணியாளர்களுக்கும், மார்ச் 1ஆம் தேதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மேலும் இதுவரை, நாட்டில் ஒரு கோடியே 23 லட்சத்து மூன்றாயிரத்து 131 பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.54 கோடிக்கு கொள்முதல்!