தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் கொடுமை: ஆதரவாற்றவர்களான 4000-க்கும் மேலான குழந்தைகள் - ஆதரவாற்றவர்களான 4000க்கும் மேலான குழந்தைகள்

'பிஎம் கேர்ஸ்' (PM CARES) குழந்தைகள் திட்டத்தின்கீழ் குடும்பத்தை இழந்த குழந்தைகளுக்கு உதவி வேண்டி பதிவான 8 ஆயிரத்து 973 விண்ணப்பங்களில், 4 ஆயிரத்து 302 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர் என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை செய்திகள்
மாநிலங்களவை செய்திகள்

By

Published : Mar 16, 2022, 6:31 PM IST

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று முன்தினம் (மார்ச் 14) தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று (மார்ச் 16) ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில், "கரோனாவால் குடும்பத்தை இழந்து ஆதரவற்றுத் தவிக்கும் குழந்தைகள் குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.

மார்ச் 14 நிலவரப்படி, 8 ஆயிரத்து 973 விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட 4 ஆயிரத்து 302 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கும்...

அவர் மாநிலங்களவையில் அளித்துள்ள தரவுகளின்படி, ஆதரவற்றோர் எண்ணிக்கையில் 0-6 வயதில் 212 குழந்தைகளும், 6-14 வயதில் 1,670 குழந்தைகளும், 14-18 வயதில் 2,001 பேரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18-23 வயதில் 418 பேர் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர் எனவும் அவர்களும் 'PM கேர்' திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் (CPS-Child Protection Services) திட்டம் - மிஷன் வாத்சல்யா என்ற ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பு தேவைப்படும் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளுக்குச் சேவைகளை வழங்க, இத்திட்டத்தின்கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

சிபிஎஸ்சி திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் (CCI- Child Care Institutions) குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற கல்வி, தொழில் பயிற்சி, மருத்துவப் பாதுகாப்பு, மனநல ஆலோசனை போன்றவற்றை சம்பந்தப்பட்ட அரசுகள் அளிக்கலாம்" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரம்: நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் மாணவிகள்; வகுப்புகள் புறக்கணிப்பு!

ABOUT THE AUTHOR

...view details