டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 புதிய கரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது நேற்றையதை விட சுமார் 4,000 குறைவு ஆகும்.
அதே நேரத்தில், நாட்டில் மேலும் 525 பேர் கரோனாவினால் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 59 ஆயிரத்து 168 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கரோனாவில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 87ஆயிரத்து 205ஆக உள்ளது. தினசரி கரோனாவினால் பாதிக்கப்படுவோரின் நேர்மறை விகிதம் 17.78% ஆகவுள்ளது.
தினசரி நேர்மறை விகிதம் 17.22%-லிருந்து சிறிது அதிகரித்தாலும், வாராந்திர நேர்மறை விகிதம் 16.65%-ஆக சரிந்துள்ளது.
கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.18%-ஆக உள்ளது மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 168 பேர் குணமடைந்துள்ள நிலையில், கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 60 ஆயிரத்து 650 ஆக உள்ளது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 23) காலை 7 மணி வரை, தற்காலிக அறிக்கைகளின்படி, இந்தியாவின் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 161.92 கோடியைத் (1,61,92,84,270) தாண்டியுள்ளது.
தென் இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரம்:தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா முறையே 30,744 ; 45,136; 42,470 என மாநிலம் வாரியாக கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிராவுடன் இந்த மூன்று மாநிலங்களும் இன்றைய எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
வட இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்: வட இந்தியாவைப் பொறுத்தவரை, மேற்கு வங்காளத்தில் 9,191 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உத்தரப்பிரதேசத்தில் 16,740 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக, உத்தரப்பிரதேச மாநில அரசு பள்ளிகள் மூடுவதை ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டித்தது.
கரோனா தொற்றுநோயால் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் தினசரி கரோனா நோய்த்தொற்றுகள் சனிக்கிழமையன்று 46,393ஆக உயர்ந்து, மாநிலத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை 74.66 லட்சமாக கொண்டு சேர்த்தது.
டெல்லியில் தொடர்ந்து கரோனா தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சனிக்கிழமையன்று (ஜனவரி 22) 45 பேர் கரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இது ஜூன் 5, 2021 முதல் டெல்லியின் அதிகபட்ச ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 6,568 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். பதினான்கு மாநிலங்கள் 10-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.
மேலும் தற்போதைய கரோனா தொற்றில் இறந்த நோயாளிகளில் 60% முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி முடித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Sunday Lockdown-ல் தூங்கிய தூங்கா நகரம்