புதுடெல்லி:இந்தியாவின் 72வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறைத் தலைவர் ராகேஷ் அஸ்தானா, மொத்தம் 27,723 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் இலக்கு
கடந்த இரண்டு மாதங்களாக, டெல்லி காவல்துறை தலைநகரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
"டெல்லி எப்போதும் சமூக விரோதிகளின் இலக்காகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டும் நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக, மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம்" என கூறினார்.
குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சீன ராணுவத்திடமிருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை!