தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டவிரோதமாக கருக்கலைப்பு கருவி விற்பனை: 8 பேர் கைது - கருக்கலைப்புக் கருவி விற்பனை

குஜராத்: சட்டவிரோதமாக போதைப்பொருள், கருக்கலைப்பு கருவி விற்பனைசெய்த எட்டு பேரை உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகம் (எஃப்.டி.சி.ஏ.) கைது செய்துள்ளது.

Over 24,000 abortion kits worth Rs 1.5 cr seized
Over 24,000 abortion kits worth Rs 1.5 cr seized

By

Published : Jun 14, 2021, 10:35 AM IST

அகமதாபாத், சூரத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள்கள், கருக்கலைப்பு கருவிகள் விற்பனை செய்யப்பட்டுவதாக உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குஜராத் மாநிலத்திலுள்ள உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகம் (எஃப்.டி.சி.ஏ.) சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த எட்டு பேரை கைதுசெய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 ஆயிரத்து 363 கருக்கலைப்பு கருவிகளும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிடாஸின் குப்பிகளும் பறிமுதல்செய்யப்பட்டன.

இத்தகைய கருக்கலைப்பு கருவிகளை மகப்பேறு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே விற்பனைசெய்ய முடியும் என்ற நிலையில் கருவிகள் விநியோகம் செய்பவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வாங்கி அதனை இணையதளத்தில் விற்பனை செய்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இவர்கள் இணையதளம் மூலம் இதுபோன்ற 800 கருவிகளை விற்பனை செய்துள்ளதாக எஃப்.டி.சி.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details