தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அக்னிபத் போராட்டங்கள்: ரயில்வேத் துறைக்கு ரூ. 259.44 கோடி இழப்பு

அக்னிபத் போராட்டங்களில் நடந்த வன்முறைகளால் ரயில்வே துறைக்கு ரூ. 259.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Over 2000 trains cancelled due to Agnipath protests: Govt in RS
Over 2000 trains cancelled due to Agnipath protests: Govt in RS

By

Published : Jul 22, 2022, 5:20 PM IST

டெல்லி:இதுகுறித்து மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வெடித்த வன்முறைகள் காரணமாக ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை நாடு முழுவதும் 2,132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் பணத்தைத் திரும்பப்பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பயணிகளிடையே குழப்பமும், பயமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ரூ.102.96 கோடி பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. குறிப்பாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ரயில்வே சொத்துக்கள் சேதம் காரணமாக ரூ. 259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த சேதப்படுத்தப்பட்ட ரயில்கள் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:லக்னோவில் இனி போக்குவரத்தை கண்காணிக்க ஆசிரியர்கள்...

ABOUT THE AUTHOR

...view details