இந்தியாவில் கோவிட் தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய சுகாதராத்துறை அமைச்சகம் முக்கிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 182.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 97 கோடியே 94 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 82 கோடியே 42 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி திட்டம் கடந்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்ததாக பிப்ரவரி 2ஆம் தேதி முன்களப் பணியார்களுக்கும், மார்ச் 1ஆம் தேதி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.