இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வழங்கப்பட்ட கரோனா நிவாரணப் பொருட்களை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நேற்று (மே. 18) மாலை நடைபெற்றது.
இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"தற்போது கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு சார்பில் 1 லட்சம் முககவசம், மருந்துகள், கையுறைகள், ஆக்ஸிஜன் ப்லொ மீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஓரிரு நாளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும. கதிர்காமம் அரசு மருத்துமனையில் 400 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றது.
சிஐஐ சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள்: சுகாதாரத்துறையிடம் ஆளுநர் வழங்கினார்! - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி: இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு சார்பில் 1 லட்சம் முககவசங்கள், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் கருவி ஆகியவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன. இதனை துணை நிலை ஆளுநர் தமிழிசை பெற்றுக்கொண்டு, சுகாதாரத்துறையிடம் வழங்கினார்.
சிஐஐ சார்பில் வழங்கப்பட்ட கரோனா நிவாரணப் பொருட்கள்
இதேபோன்று வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று, பெரிய மார்க்கெட் அங்கேயே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அரசோடு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
Last Updated : May 19, 2021, 10:05 AM IST