பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளை பிடிப்பதற்காக, கடந்த 1984ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'ஆபரேஷன் புளூஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆபரேஷனில் பிரிவினைவாதிகள், பொதுமக்கள் என '1,592 பேர்' உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின் 38ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொற்கோயிலைச் சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான ஆயுதங்களையும் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி, ஏராளமான சீக்கியர்கள் கோயிலுக்கு வெளியே கூடினர்.
'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொற்கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அகல் தக்த் சாஹிப் அறக்கட்டளையின் தலைவர் கியானி ஹர்ப்ரீத் சிங் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், சீக்கியர்களை கையாள்வதற்காக அப்போதைய அரசு பல்வேறு நடைமுறைகளை கையாண்டது. சீக்கியர்களை எல்லா வகையிலும் பலவீனப்படுத்துவதே அரசின் நோக்கமாக இருந்தது. 1984-ல் சீக்கிய குருமார்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. நமக்கு பல சவால்கள் உள்ளன. நாம் போராட வேண்டியுள்ளது.