தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதியில் ஜூலை மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம் - திருப்பதியில் ஜூலை மாத தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசனத்திற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியது.

திருப்பதியில் ஜூலை மாத தரசினத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
திருப்பதியில் ஜூலை மாத தரசினத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

By

Published : Jun 22, 2021, 2:11 PM IST

அமராவதி: கரோனா பரவல் காரணமாக திருமலை கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை மாத தரிசன சீட்டு இன்று இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் 31ஆம் தேதி வரையில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் காலை 9 மணிமுதல் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. ஒரு தரிசன சீட்டின் விலை 300 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தரிசன சீட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். கடந்த ஜூன் 20ஆம் தேதி தேவஸ்தான கூட்டம் நடைபெற்றது. பின்பு பேசிய தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி,

"கரோனா ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். திருப்பதியில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.

ஏற்கனவே ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால், திருமலைக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாகச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அலிபிரியிலிருந்து ஸ்ரீவாரி மெட்டுக்கு இலவச பேருந்துகள் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்ல தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க;இந்தியாவில் திருப்பதி தேவஸ்தானம் கட்டும் கோயில்களின் கட்டுமானப் பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details