மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது. 16ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்.. ஆன்லைன் புக்கிங் தொடக்கம்! - சபரிமலை பிரசாதம் ஆன்லைன் புக்கிங் துவக்கம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை தபால் மூலம் பெறும் ஆன்லைன் புக்கிங் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் சபரிமலை பிரசாதத்தை பெறும் வசதியை திருவிதாங்கூர் தேவஸம் போர்டும், தபால் துறையும் இணைந்து செய்துள்ளன. அந்த பிரசாதம் பாக்கெட்டில் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாதம் ஆகியவை அடங்கும். அதன் விலையாக, ரூபாய் 450ஐ நிர்ணயித்துள்ளனர். இந்த பிரசாதம் பாக்கெட் புக் செய்த மூன்று நாள்களில் வீட்டிற்கு வந்து சேரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த புக்கிங் நவம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
மண்டல பூஜை தொடங்கும் 16ஆம் தேதிக்கு பிறகே பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது.