தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பயங்கரவாதி! - ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீர்
காஷ்மீர்

By

Published : Mar 14, 2021, 3:49 PM IST

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கிடையே நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

சோபியான் மாவட்டத்தில் என்கவுன்ட்டர் நடைபெற்றதாகவும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் வீட்டில் மறைந்தக் கொண்டிருந்ததாகவும் காஷ்மீர் மண்டல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பயங்கரவாதிகள் மறைந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இரவில் தொடங்கிய என்கவுன்ட்டர் விடிய விடிய நடைபெற்றது. இதற்கிடையே, அப்பகுதியில் இணையம் முடக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்

இதேபோல், கடந்த மார்ச் 11ஆம் தேதி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details