தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை - when the news of child kidnappers appearing

அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அசாமில் குழந்தையை கடத்த முயன்றதாக நபர் ஒருவர் அடித்துக் கொலை
அசாமில் குழந்தையை கடத்த முயன்றதாக நபர் ஒருவர் அடித்துக் கொலை

By

Published : Sep 1, 2022, 9:15 AM IST

ஜோனாய்: அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாய் பகுதியில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (ஆகஸ்ட்31) நடந்துள்ளது. அந்த நபர் தாயின் மடியிலிருந்து குழந்தையை இழுத்து பறிக்க முயன்றுள்ளார்.

உடனே தாய் கூச்சலிடவே, அந்த நபர் தப்பியோட முயன்றார். அவரை துரத்திப்பிடித்த மக்கள் சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் படுகாயமடைந்து மயக்கமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்கு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த நபர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details