ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் ஜஸ்பிர் சிங்கின் வீட்டில் நேற்றிரவு வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்கள் வீட்டின் முன் பகுதியில் அமர்ந்திருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக ரஜோரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.