தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டாலின் பிறந்தநாள்: புதுச்சேரியில் ஒரு நாள் இலவச பேருந்து - புதுச்சேரியில் ஒரு நாள் இலவச பேருந்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரியில் பொதுமக்களுக்கு ஒரு நாள் இலவச பேருந்து சேவையை, சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தொடங்கி வைத்தார்.

stalin birthday  one day free bus on Stalin birthday  tamil nadu cm stalin  one day free bus in Puducherry  ஒரு நாள் இலவச பேருந்து  ஸ்டாலின் பிறந்தநாள்  புதுச்சேரியில் ஒரு நாள் இலவச பேருந்து  தமிழ்நாடு முதலமைச்சர்
இலவச பேருந்து

By

Published : Mar 1, 2022, 6:31 AM IST

புதுச்சேரி:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை, புதுச்சேரி மாநிலம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மணவெளி தொகுதி திமுக பொறுப்பாளர் ராஜாராமன், செயற்குழு உறுப்பினர் இளங்கோ மற்றும் சண்முகம் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நேற்று (பிப். 28) ஒரு நாள் முழுவதும், புதுச்சேரியில் இருந்து பாகூர் பகுதிக்கு தனியார் பேருந்தில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை திமுக மாநில கழக அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா தொடங்கி வைத்தார். மேலும் இதில் மக்களுடன் பயணம் செய்தார். இதனைத் தொடர்ந்து 500 பேருக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், வடிவேல், , தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'வாழ்த்துகள், ஓயாது உழைத்திட ஊக்கம் தரும்!' - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details