தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குதிரை விலை ஒரு கோடிப்பே..! - குதிரை

பீகார் சோனேபூர் மேளாவில் சொகுசு காருக்கு ஈடாக குதிரை ஒன்று விலை பேசப்பட்ட சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

குதிரை
குதிரை

By

Published : Nov 20, 2022, 7:58 AM IST

சோனேபூர்: பீகாரில் பிரபல சோனேபூர் மேளா விலங்குகள் கண்காட்சியில் குதிரை ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கங்கை மற்றும் கந்தகி நதிகள் சங்கமிக்கும் பகுதியில் சோனேபூர் மேளா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் சோனேபூர் மேளா ஆசியாவிலேயே மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை மற்றும் கவிஞர்கள் மேளாவில் கலந்து கொண்டு இசை, நடனம், கலை, மற்றும் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மேலும் கால்நடை வர்த்தகத்திற்கு சோனேபூர் மேளா பெயர் போனதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கால்நடைகள் பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ளும் வணிகர்கள் உள்ளிட்டோர் ஏலம் மூலம் தாங்கள் விருப்பப்பட்ட கால்நடைகளை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.

அந்தவகையில் கண்காட்சியில் ஒரு குதிரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பாதல் என அழைக்கப்படும் அந்த குதிரை விஜேந்திர ராய் என்பவருக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. ராசியான குதிரை என அழைக்கப்படும் பாதலை, வாங்கியது முதல் தன் வீட்டில் நிலவிய கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்கியதாக ராய் கூறுகிறார். மேலும் தங்கள் கிராமத்து வாசிகள் குதிரை வாங்கி அதை பாதலின் அருகில் கட்டினால் விஷேசம் நடக்கும் என நம்புவதாக விஜேந்திர ராய் கூறினார்.

தன் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து குதிரையை வாங்கியதாகவும், அதன் பின் தன் குடும்ப பிரச்சனைகள் தீர்ந்ததாக ராய் தெரிவித்தார். பாதல் வகை குதிரை இனம் அதிகளவில் காணப்படாததே அதிக விலைக்கு மற்றொரு காரணம் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

சொகுசு காருக்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் வரை பாதலுக்கு விலை பேசப்பட்ட போதும் அதை விற்கப்போவதில்லை என விஜேந்திர ராய் தெளிவாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 'புதிய கல்விக் கொள்கை, சிஏஏ குறித்த கேள்விகளால் சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details