குறைந்து வரும் கரோனா தொற்று: பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! - இந்தியாவில் கரோனா
09:24 May 29
டெல்லி: கடந்த 24 மணிநேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 84ஆயிரத்து 601 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து, 73ஆயிரத்து, 790 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 2 கோடியே, 77லட்சத்து 29ஆயிரத்து 247 ஆக மொத்த பாதிப்பு உயர்ந்துள்ளது.
மேலும், 3,617 பேர் நோய் தொற்றால் இறந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து, 22 ஆயிரத்து, 512ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2கோடியே 51லட்சத்து 78ஆயிரத்து 11 பேர் மீண்டுள்ளனர். மொத்தம் 20 கோடியே 89 லட்சத்து 2,445 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.