இந்தியாவில் இருவருக்கு உருமாறிய ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால், "தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு வந்த இருவருக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் ஆண்கள், ஒருவருக்கு 66 வயது மற்றொருவருக்கு 46 வயது. இந்த இருவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
டெல்டா ரக கரோனாவை விட ஐந்து மடங்கு வீரியம் மிக்க ஒமைக்ரான் தொற்று 29 நாடுகளில் இதுவரை பரவியுள்ளது. இதுவரை, உலகளவில் மொத்தம் 373 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஒமிக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. முககவசம், தனிநபர் இடைவேளை, சானிடைசர் பயன்பாடு போன்ற கோவிட் விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
தடுப்பூசி திட்டத்தை அரசு தொடர்ந்து தீவிரப்படுத்த உள்ளது. ஒமைக்ரான் பரவல் விவரம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?