தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்ட உமர் அப்துல்லா - உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லா இன்று (ஏப்.07) ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் சார்ந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.

கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்ட உமர் அப்துல்லா
கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்ட உமர் அப்துல்லா

By

Published : Apr 7, 2021, 2:12 PM IST

இன்று (ஏப்.07) கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மருத்துவக் குழுவினரின் சேவைக்கு நன்றி தெரிவித்து பேசியுள்ளார். அதில், "இன்று காலை கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். வலி இல்லை. இன்று எனக்கு தடுப்பூசி போட்டதற்காக ஸ்ரீநகர் எஸ்கேஐஎம்எஸ்ஸில் உள்ள அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்ட உமர் அப்துல்லா

முன்னதாக, முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின்பு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து ஃபரூக் அப்துல்லாவிற்கு முன்னதாககரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details