தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 நெருக்கடியின்போது கிராமப்புறப் பொருளாதாரம்தான் நாட்டை தாங்கிப்பிடித்தது - ஓம் பிர்லா - எம்.எஸ்.எம்.இ. தேசிய மாநாட்டில்

டெல்லி: கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் கிராமப்புறப் பொருளாதாரமும், வேளாண் துறையும்தான் நாட்டை வீழ்ச்சியடையாமல் தாங்கிப் பிடித்தன என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நெருக்கடியின்போது கிராமப்புற பொருளாதாரம் தான் நாட்டை தாங்கிப் பிடித்தது -  ஓம் பிர்லா
கோவிட்-19 நெருக்கடியின்போது கிராமப்புற பொருளாதாரம் தான் நாட்டை தாங்கிப் பிடித்தது - ஓம் பிர்லா

By

Published : Jan 7, 2021, 3:57 PM IST

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ. தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்துகொண்டார்.

அப்போது உரையாற்றிய அவர், “உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பால் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அனைத்துத் துறைகளும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தபோதும், கிராமப்புறப் பொருளாதாரம் வலுவாக இருந்தது.

கிராமப்புறப் பொருளாதாரமும், விவசாயிகளின் பணியும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் வீழ்ச்சியடையாமல் தாங்கிப் பிடித்தன.

கோவிட்-19 நெருக்கடியின்போது கிராமப்புறப் பொருளாதாரம்தான் நாட்டை தாங்கிப் பிடித்தது - ஓம் பிர்லா

வேளாண் சார்ந்த திட்டங்களை வகுத்துவைத்திருப்பது மிக அவசியமாகும். அதன் மூலமாகவே கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் குடியேறுவதைத் தடுக்க முடியும்.

வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற வேளாண் சார்ந்த திட்டங்களை வகுத்தால்தான் நாட்டின் வேளாண்மைத் துறை மேம்படும். அதற்கான வழிமுறைகளைப் பார்க்க வேண்டியது மிக அவசியம்.

கோடிக்கணக்கான மக்களுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்புகளை வழங்கிவருகின்றன. அத்துறையை மேம்படுத்துவது அவசிய தேவையாகி உள்ளது” என்றார்.

இதையும் படிங்க :மருத்துவமனையைச் சுற்றிப்பார்த்த சிறுத்தை: பீதியில் உறைந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details