தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் அம்மனுக்கு காலணிகளை காணிக்கையாக செலுத்தி விநோத வழிபாடு!

கர்நாடகாவின் கலபுர்கி கோலா லக்கம்மா தேவி கோயிலில் பக்தர்கள் தங்கள் காலணிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கர்நாடகாவில் அம்மனுக்கு காலணிகளை காணிக்கையாக செலுத்தி வினோத வழிபா
கர்நாடகாவில் அம்மனுக்கு காலணிகளை காணிக்கையாக செலுத்தி வினோத வழிபா

By

Published : Nov 11, 2022, 10:35 PM IST

Updated : Nov 11, 2022, 10:44 PM IST

கர்நாடகா: கலபுர்கியில் கோலா லக்கம்மா தேவி கோயிலில் பக்தர்கள் தங்கள் காலணிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஒரு ஜோடி காலணிகள் காணிக்கையாக அளித்தால் தான் திருப்தி அடைவாள் அம்மன் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்து பஞ்சமி அன்று நடக்கும் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தேங்காயுடன் ஒரு ஜோடி செருப்பு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கோல லக்கம்மா, காளி தேவியின் அவதாரமாகும். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் காலணிகளை கோயில் முன்பு கட்டுகின்றனர். இந்த காலணிகளை பக்தியுடன் தங்கள் உடலையும் பாதங்களையும் பக்தர்கள் மறைத்து வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்குவதால் தேவியின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கோலா லக்கம்மா தேவியை கலபுர்கியில் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் வழிபடுகின்றனர். சைவ பக்தர்கள் ஹோலிகை என்பவற்றை வழங்கும்போது, அசைவ பக்தர்கள் ஆடு, கோழியை பலியிட்டு, லக்கம்மாவுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

இந்த சடங்கு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இத்திருவிழாவில் பக்தர்கள் அம்மனிடம் தங்கள் பிரச்னைகள் தீர வேண்டும் என வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் திருவிழாவின்போது கோயிலின் முன்பு தங்கள் காலணிகளை காணிக்கையாக கட்டுகின்றனர்.

கர்நாடகாவில் அம்மனுக்கு காலணிகளை காணிக்கையாக செலுத்தி வினோத வழிபா

இதையும் படிங்க: எகிறும் திருமண உடைகளின் விலை; தீர்வாக கேரள இளைஞர்களின் உடை வங்கி

Last Updated : Nov 11, 2022, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details